செயல்முறை 1: யுனிகோட் கொண்டு உள்ளீடு செய்தல்
     
  இந்த செயல்முறையில் யுனிகோட் செயலிகளில் குறள் செயலி கொண்டு எவ்வாறு தமிழை உள்ளீடு செய்யலாம் என்பது பற்றிக் காண்போம். இதற்குமுன் உங்கள் கணினியில் யுனிகோட்டினை அமைக்க வேண்டும், இல்லையேல் "கணினியில் யுனிகோட்டினை அமைப்பது எப்படி?" என்ற பகுதியை காணவும்.  
 
குறள் செயலி தொடங்கப்பட்டிருந்தால், கணினித் திரையின் கீழ்-வலது புறத்தில் உள்ள "கு" என்ற சின்னத்தைச் சுட்டியால் இரண்டு முறை சொடுக்கவும். இல்லையேல் கணினித்திரையில் நிறுவியிருக்கும் Kural 4.0 என்ற சின்னத்தைச் சுட்டியால் இரண்டு முறை சொடுக்கி, குறள் செயலியைத் தொடங்கவும்.
குறள் அமைப்பு பகுதியில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்யவும்.
 
குறியீடு: யுனிகோட்

மாற்று விசை: ALT+K

விசைப்பலகை: ஒலியியல்

தேவைப்பட்டால் "மீண்டும் இயக்கவும்" என்ற பொத்தானைச் சொடுக்கி குறள் செயலியை நிறுத்தி மீண்டும் இயக்கவும்.
"கவிதை சொற்செயலி" என்ற பொத்தானை சொடுக்கி கவிதை சொற்செயலியைத் தொடங்கவும்.
கவிதை சொற்செயலியில் UniKural என்ற எழுத்துருவைத் தேர்வு செய்யவும்.
இப்போழுது kuRaL என்று உள்ளீடு செய்யவும், சொற்செயலியில் "குறள்" என்ற சொல் யுனிகோட் தமிழில் இருப்பதைக் காணலாம்.
  குறிப்பு: தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மாற Alt+k என்ற மாற்று விசையைப் பயன்படுத்தவும், இதற்கு Alt என்ற விசையை அழுத்திக்கொண்டே k என்ற விசையை அழுத்த வேண்டும்.
   
  செயல்முறை 2: திஸ்கி கொண்டு உள்ளீடு செய்தல்
       
  இந்த செயல்முறையில் குறள் செயலி கொண்டு திஸ்கி குறியீட்டு முறையில் எவ்வாறு தமிழை உள்ளீடு செய்யவது என்பது பற்றிக் காண்போம்.
 
குறள் செயலி தொடங்கப்பட்டிருந்தால், கணினித் திரையின் கீழ்-வலது புறத்தில் உள்ள "கு" என்ற சின்னத்தைச் சுட்டியால் இரண்டு முறை சொடுக்கவும். இல்லையேல் கணினித்திரையில் நிறுவியிருக்கும் Kural 4.0 என்ற சின்னத்தைச் சுட்டியால் இரண்டு முறை சொடுக்கி, குறள் செயலியைத் தொடங்கவும்.
குறள் அமைப்பு பகுதியில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்யவும்.
 
குறியீடு: திஸ்கி

மாற்று விசை: ALT+K

விசைப்பலகை: ஒலியியல

தேவைப்பட்டால் "மீண்டும் இயக்கவும்" என்ற பொத்தானைச் சொடுக்கி குறள் செயலியை நிறுத்தி மீண்டும் இயக்கவும்.
"கவிதை சொற்செயலி" என்ற பொத்தானை சொடுக்கி கவிதை சொற்செயலியைத் தொடங்கவும்.
கவிதை சொற்செயலியில் TSCKural என்ற எழுத்துருவைத் தேர்வு செய்யவும்.
இப்போழுது kuRaL என்று உள்ளீடு செய்யவும், சொற்செயலியில் "குறள்" என்ற சொல் தமிழில் இருப்பதைக் காணலாம்.
  குறிப்பு: தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மாற Alt+k என்ற மாற்று விசையைப் பயன்படுத்தவும், இதற்கு Alt என்ற விசையை அழுத்திக்கொண்டே k என்ற விசையை அழுத்த வேண்டும்.
   
Home | About KuralSoft | Unicode Help |Contact Us
Copyright © 2006 KuralSoft.com. All rights reserved.